அமெரிக்காவில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.3 ஆக பதிவு

  தினத்தந்தி
அமெரிக்காவில் நிலநடுக்கம்  ரிக்டர் 4.3 ஆக பதிவு

வாஷிங்டன், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பெர்க்லே நகரின் தென் கிழக்கு பகுதியில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரம் என்பதால், நிலநடுக்கம் ஏற்பட்டபோது தூக்கத்தில் இருந்த பலர் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை