பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: சூப்பர்4 சுற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்தியா

துபாய், 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இலங்கை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது. இதனையடுத்து துபாயில் நேற்றிரவு அரங்கேறிய சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் அணிகள் கோதாவில் குதித்தன. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் சூப்பர்4 சுற்று புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை குறித்து இங்கு காணலாம்..! இந்தியா மற்றும் வங்காளதேசம் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் இந்திய அணி முதலிடத்திலும், வங்காளதேசம் 2-வது இடத்திலும் உள்ளன. இன்னும் வெற்றி கணக்கை தொடங்காத இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே ரன் ரேட் அடிப்படையில் கடைசி 2 இடங்களில் உள்ளன. சூப்பர்4 சுற்று புள்ளி பட்டியல்: 1. இந்தியா - 2 புள்ளிகள் - +0.689 2. வங்காளதேசம் - 2 புள்ளிகள் - +0.121 3. இலங்கை - 0 புள்ளி - -0.121 4. பாகிஸ்தான் - 0 புள்ளி - -0.689
மூலக்கதை
