ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்

  தினத்தந்தி
ஆபரேஷன் சிந்தூர் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம்: ராஜ்நாத் சிங்

ரபாத், மொராக்கோ பாதுகாப்புத்துறை மந்திரி அப்தெல்டிப் லௌடியின் அழைப்பின் பேரில் 2 நாள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மொராக்கோ சென்றுள்ளார். வட ஆப்பிரிக்க நாட்டுக்கு இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் செல்வது இதுவே முதல் முறையாகும். அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் கலந்துரையாடினார். நிகழ்வில் அவர் பேசியதாவது; சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் அந்தஸ்து உயர்ந்து கொண்டு வருவதை நீங்கள் உணர முடிகிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கு முன்னர், சர்வதேச சமூகத்தில் இந்தியா பேசும் போது, அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை.ஆனால் இன்றோ இந்தியா சர்வதேச மன்றத்தில் பேசும் போது, முழு உலகமும் அதை கவனித்துக் கேட்கிறது. போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் வலியுறுத்தியதால் நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம். பிரதமரும் ஆப்பரேஷன் சிந்தூர் ஒரு இடைநிறுத்தம் என்று தான் கூறி உள்ளார். அது மீண்டும் தொடங்கலாம். ஆப்பரேஷன் சிந்தூர் 2, ஆபரேஷன் சிந்தூர் 3 என்று எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அதை நாங்கள் சொல்லமுடியாது, அவர்களின் நடவடிக்கையை பொறுத்தது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு பதில் கிடைக்கும்” இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை