டியூசன் சென்டர் மேற்கூரை இடிந்து விபத்து; 7 பேர் பலி

  தினத்தந்தி
டியூசன் சென்டர் மேற்கூரை இடிந்து விபத்து; 7 பேர் பலி

லாகூர்,பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணம் ஹபீஸ்பாத் நகரில் டியூசன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்த டியூசன் சென்டரில் நேற்று மாலை 9 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் வகுப்பறையில் இருந்தனர். அப்போது, டியூசன் சென்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வகுப்பறையில் இருந்த 2 ஆசிரியர்கள் 5 மாணவர்கள் என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை