மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

  தினத்தந்தி
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா  பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

லாகூர், தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முயற்சிக்கும். அதே வேளையில் ஆறுதல் வெற்றிக்காக பாகிஸ்தான் கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.

மூலக்கதை