கொழும்பில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க களமிறங்கிய விமானப்படை - லங்காசிறி நியூஸ்

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புறக்கோட்டை முதல் குறுக்கு தெருவில் உள்ள தொலைபேசி உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடையின் மேல் தளத்தில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த 12 தீயணைப்பு வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளது. மேலும் 2 விமானப்படை லொரிகளும் தீயை அணைக்க அனுப்பப்பட்டு இருப்பதாக விமானப்படை செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
