வாரத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

  தினத்தந்தி
வாரத்தின் முதல் நாளில் சற்று குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

சென்னை, உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் வர்த்தக போரால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதனால் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தொடர்ந்து நிலவும் பொருளாதார மந்தநிலை, முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீது அதிகளவில் திரும்பியுள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரு முடிவே இல்லாத உயரத்தை நோக்கி தங்கம் விலை செல்கிறது. இந்த சூழலில் கடந்த 10, 11-ந்தேதிகளில் விலை மாற்றம் இல்லாமல், அதனுடைய வேகத்தில் நிசப்தம் நிலவி வந்த சூழலில், 12-ம் தேதி மீண்டும் எகிறி, உயர்ந்து காணப்பட்டது. இதன்படி 13-ம் தேதி காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.81,920-க்கு விற்பனையானது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரன் ரூ.80 குறைந்து ரூ,81,680க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராம் ரூ.10 குறைந்து ரூ.10,210க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி,கிராம் ரூ.143க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 15.09.2025 ஒரு சவரன் ரூ,81,680 (இன்று) 13.09.2025 ஒரு சவரன் ரூ.81,760 12.09.2025 ஒரு சவரன் ரூ.81,920 11.09.2025 ஒரு சவரன் ரூ.81,200 10.09.2025 ஒரு சவரன் ரூ.81,200

மூலக்கதை