யாழில் அரங்கேறிய வாள்வெட்டு சம்பவம்: 10 நாட்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
யாழில் அரங்கேறிய வாள்வெட்டு சம்பவம்: 10 நாட்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது  லங்காசிறி நியூஸ்

 சமீபத்தில் யாழில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 10 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் வேலணை பகுதியில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் 10 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கையானது நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலணை அராலி சந்தியில் கடந்த மாதம் 31ம் திகதி பட்டா ரக வாகனத்தில் வந்த சிலர் காரில் சென்ற நபர் ஒருவரை வழிமறித்து வாளால் வெட்டி படு காயத்திற்கு உள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றது.இதையடுத்து காயமடைந்த நபர் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல் குழுவினரை பிடிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி கொன்சாபத்து ஹரிதாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பிரதான குற்றவாளியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.  அத்துடன் மீதமுள்ள நபர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை