கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளை - வெளியான CCTV காணொளி! - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளை  வெளியான CCTV காணொளி!  லங்காசிறி நியூஸ்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளான ஏ9 வீதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள், உதயநகர் மற்றும் விவேகானந்தநகர் ஆகிய இடங்களில் பல கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏ9 வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நள்ளிரவு வேளையில் கடையின் முன் பகுதி கதவை உடைத்து சுமார் 15 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை களவாடிச் செல்லப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் பாதுகாப்பு கமராக்களின் வீடியோக்களில் திருடர்கள் சிக்கியுள்ளனர். இதேபோன்று உதயநகர் பகுதியில் வீடு ஒன்றில் மூன்று திருடர்கள் முகமூடி அணிந்தவாறு வீட்டிற்கு செல்வதும் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. 

மூலக்கதை