ஆப்பிள் ஐபோன் 16 மாடல்கள் விலை அதிரடியாக குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

  தினத்தந்தி
ஆப்பிள் ஐபோன் 16 மாடல்கள் விலை அதிரடியாக குறைப்பு: வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

மிகவும் பிரபலமான செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007 ஆம் ஆண்டு தனது செல்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. அப்போது முதல் ஆண்டுதோறும் தங்கள் பயனர்களுக்கு புதிய அப்டேட் வழங்கும் வகையில் புது புது மாடல் ஐபோன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 17 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது சந்தையில் ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 புரோ, ஐபோன் 17 புரோ மேக்ஸ் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இந்த முறை புது வரவாக ஐபோன் 17 ஏர் வெளிவந்துள்ளது. இதோடு ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ, ஆப்பிள் வாட்ச் 11 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் 3 அல்ட்ரா உள்ளிட்ட கேட்ஜெட்களும் அறிமுகமாகி உள்ளன. வரும் 19-ம் தேதி சந்தையில் இவை விற்பனைக்கும் கிடைக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. புதிய மாடல்கள் அறிமுகம் செய்யபட்டுள்ளதால் ஐபோன் 16 மாடல்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. செல்போனுக்கு ரூ 10 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐபோன் 16 அடிப்படை மாடல் விலை ரூ.79,900 ல் இருந்து 69,900 ஆக குறைந்துள்ளது. ஐபோன்16 பிளஸ் மாடல் ரூ.79,9000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் விலை ரூ.10 ஆயிரம் குறைந்துள்ளது ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐபோன் 17 அடிப்படை ஸ்டோரேஜ் வேரியண்ட்டான 256 ஜிபி மாடல் விலை ரூ.82,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 512 ஜிபி மாடலின் விலை ரூ.1,02,900ஆக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை