ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்: டாடா கார்கள் விலை குறைப்பு

ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ள புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்படி கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டர் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் டாடா நிறுவனம் தனது வாகனங்களின் விலைகுறைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி டியோகோ ரூ.75 ஆயிரம், டிகோர் ரூ.80 ஆயிரம், ஆல்ட்ரோஸ் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், பன்ச் ரூ.85 ஆயிரம், நெக்சான் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம், ஹாரியர் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மற்றும் சபாரி ரூ.1 லட்சத்து 45 ஆயிரம்வரை விலைகுறையும் என அறிவித்துள்ளது. மேலும் மகேந்திரா, மாருதி சுசுகி, இருசக்கர வாகன நிறுவனங்களான பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களும் விலைகுறைப்பை அறிவித்துள்ளன.
மூலக்கதை
