உணவு டெலிவரி பிளாட்பார்ம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய சோமோட்டா

  தினத்தந்தி
உணவு டெலிவரி பிளாட்பார்ம் கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய சோமோட்டா

மும்பை, பிரபல உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமோட்டா பயன்பாட்டுக் (பிளாட்பார்ம்) கட்டணத்தை உயர்த்தியுள்ளது. சொமேட்டோவில் ஒவ்வொரு முறையும் உணவு ஆர்டர் செய்யும் போது வாடிக்கையாளர்கள் ரூ.12-ஐ பிளாட்பார்ம் கட்டணமாக செலுத்த வேண்டும். அண்மையில் ஸ்விக்கி நிறுவனம் இந்த பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. ஸ்விக்கியில் ரூ.14 என வாடிக்கையாளர்களிடம் பிளாட்பாரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சோமோட்டாவின் தாய் நிறுவனமான எடர்னல், ஜூன் 2025ல் முடிவடைந்த காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 36% சரிவை பதிவு செய்துள்ளது. நிறுவனத்தின் லாபம் ரூ.25 கோடியாக இருந்தது. மார்ச் காலாண்டில் இது ரூ.39 கோடியாக இருந்தது. வருவாய் சரிவு , நிதி நெருக்கடியை சமாளிக்க இந்த பிளாட்பார் கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

மூலக்கதை