பிரித்தானியாவில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த வெற்றி: நீதிமன்றம் வழங்கிய அனுமதி! - லங்காசிறி நியூஸ்

பிரித்தானியாவில் இலங்கை பெண் ஒருவர் தன்னுடைய மேல் முறையீட்டு கோரிக்கையில் வெற்றி பெற்றுள்ளது.இலங்கை பெண் ஒருவர் பிரித்தானிய நீதிமன்றத்தில் தன்னுடைய புகலிட கோரிக்கை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டில் வெற்றி பெற்றுள்ளார்.தனது குடும்பத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதால் இலங்கையில் தான் கைது செய்யப்படலாம் என 2021ம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த இலங்கை பெண் தெரிவித்தார்.அத்துடன் மோசமான மனநிலை காரணமாக தன்னால் பயணிக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் வாதிட்டார்.முந்தைய தீர்ப்பில், இலங்கை பெண்ணின் கூற்றை நிராகரித்தது. அத்துடன் அவர் நம்பகமானவராக இல்லை என்றும், நான்கு மகள்களில் ஒருவருடன் அவர் மீண்டும் பயணம் செய்யலாம் என்றும் உத்தரவிட்டது.ஆனால், அவருக்கு கடுமையான மனச்சோர்வு, பதற்றம் மற்றும் தவறான முடிவெடுக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ அறிக்கை சுட்டிக் காட்டியது. இந்நிலையில் மேல்முறையீட்டு வழக்கில் மருத்துவ அறிக்கையை சுட்டிக்காட்டி நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதித்துள்ளார்.
மூலக்கதை
