இலங்கையில் பிரான்ஸுக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி: குற்றவாளி தலைமறைவு - லங்காசிறி நியூஸ்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி இலங்கையில் ரூ. 10 லட்சம் மோசடி செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி அளித்து ரூ. 10 லட்சம் மோசடி செய்யப்பட்டதை அடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது மானிப்பாய் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தெல்லிப்பழை - மாவிட்டபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், இலங்கையின் சங்கானையை சேர்ந்த நபர் ஒருவரை பிரான்ஸிற்கு அனுப்புவதாக கூறி ரூ. 13 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.ஆரம்பத்தில் வாக்குறுதி கொடுத்தப்படி பிரான்ஸிற்கு அனுப்ப முடியாததை அடுத்து ரூ. 3 லட்சம் சம்பந்தப்பட்ட நபருக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் மீதமுள்ள ரூ. 10 லட்சம் இதுவரை திருப்பி கொடுக்கப்படவில்லை.இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து சந்தேக நபர் தலைமறைவு ஆகியுள்ளார். தற்போது அவரை தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மூலக்கதை
