அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா.? - சீமான் கேள்வி
சென்னை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன். வெற்றியடைந்தால் இருப்பேன்.. தோல்வியடைந்தால் சென்றுவிடுவேன் என்பவன் கோழை. எங்களுக்கு தெரியாத மூன்றெழுத்து பயம். எங்கள் பரம்பரைக்கே தெரிந்த மூன்றெழுத்து வீரம். 60 ஆண்டுகளாகியும் தலைநகரில் மழை வெள்ளம் வடிய ஏற்பாடு செய்யவில்லை. அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சர்கள் சாப்பிடுவார்கள்? எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை. பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான். மீனம்பாக்கம் விமான நிலையம் என்பது தேவை. பரந்தூரில் விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது பேராசை. அடர்த்தியான வறுமை, அறியாமை எனும் குழந்தையைப் பெறுகிறது. வறுமையும் அறியாமையும் சேரும்போது மறதி வருகிறது. இவை மூன்றும் இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கு முதலீடாக மாறிவிடுகிறது. கட்சி மாறுபவர்களைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்பதில்லை. ”இவ்வாறு அவர் பேசினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
