ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
பெங்களூரு,கர்நாடகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு மடத்தின் மடாதிபதியை கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஹனிடிராப் முறையில் இளம்பெண் உள்பட 3 பேர் சிக்க வைத்திருந்தனர். பின்னர் இளம்பெண் உள்பட 3 பேரும் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த நிலையில், அதே மடாதிபதியின் ஆபாச வீடியோ, புகைப்படம் இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்கவும் பணம் கேட்டு ஒரு இளம்பெண் மிரட்டல் விடுத்தார் அந்த மடாதிபதி வேலை விஷயமாக பெங்களூருவுக்கு வந்திருந்தார். அப்போது மடாதிபதியை சந்தித்த இளம்பெண் ஆபாச வீடியோ, புகைப்படங்களை வெளியிடாமல் இருக்க ரூ.1 கோடி வேண்டும் என்று கேட்டு மிரட்டல் விடுத்தார். ஆனால் அவர் ரூ.1 கோடி கொடுக்க மறுத்து விட்டார். பின்னர் இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து ரூ.4½ லட்சத்தை மடாதிபதி கொடுத்திருந்தார். இருப்பினும் தொடர்ந்து மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு இளம்பெண் மிரட்டல் விடுத்து வந்தார். இதையடுத்து, நடந்த சம்பவங்கள் பற்றி பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் மடாதிபதி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்ததாக சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த ஸ்பூர்த்தி (வயது 25) என்ற இளம்பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மடாதிபதியை மிரட்டி பணம் பறித்ததை ஸ்பூர்த்தி ஒப்புக் கொண்டுள்ளார். மடாதிபதியை மிரட்டி பணம் பறித்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? என ஸ்பூர்த்தியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
வால்பாறை அருகே காட்டுப்பகுதியில் திடீர் தீ; மரங்கள் எரிந்து நாசம்
அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை அமைச்சர்கள் சாப்பிடுவார்களா.? - சீமான் கேள்வி
திமுக அரசை கண்டித்து வேலூரில் 27-ந்தேதி ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அமைச்சர் நேரு வழக்கு: ஆதாரங்களை ஒப்படைக்க டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் சோதனை ஓட்டம்
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
