மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே நீராவி என்ஜின் சோதனை ஓட்டம்
ஊட்டி, நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். பச்சை பசேல் என காணப்படும் தேயிலை தோட்டங்களுக்கு மத்தியில் குகைகள் வழியாக சென்று மலையின் இயற்கை அழகை ரசிப்பதற்காக மலை ரெயிலில் செல்கின்றனர். ஆசியாவில் தற்போதும் பல் சக்கரங்களில் இயங்கும் ஒரே மலை ரெயிலான இந்த மலை ரெயில் முதல் முறையாக குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே கடந்த 1899-ம் ஆண்டு முதல் இயக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் நிலக்கரி மூலமாக இயக்கப்பட்டு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் மாசுபாடு, பேசுபொருளாக இருந்தது. இதனால் 2002-ம் ஆண்டு பர்னஸ் ஆயில் மூலமாக இயக்கக்கூடிய வகையில் என்ஜின் மாற்றி வடிவமைக்கப்பட்டது. இந்தநிலையில் எக்ஸ் கிளாஸ் நீராவி என்ஜின்கள் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீலகிரி குயின் என அழைக்கப்படும் எக்ஸ் கிளாஸ் மலை ரெயில் நீராவி என்ஜினை பொலிவுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த என்ஜின் சமீபத்தில் ராட்சத லாரி மூலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு, கிரேன்கள் மூலம் ரெயில் பாதையில் இறக்கி வைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சோதனை ஓட்டமாக புதுப்பொலிவுடன் நீராவி என்ஜின் இயக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் குன்னூர் வந்து சேர்ந்தது. விரைவில் இந்த என்ஜினை இயக்க ரெயில்வே துறையினர் முடிவு செய்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
