அமைச்சர் நேரு வழக்கு: ஆதாரங்களை ஒப்படைக்க டிஜிபிக்கு ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை, நகராட்சி மற்று குடிநீர் வழங்கல் துறையில் பணியாளர்களை நியமிப்பதில பல நூறு கோடி லஞ்சம் கைமாறியுள்ளதாக வந்த புகாரை ஆதாராங்களுடன் மத்திய அமலாக்கத் துறை தமிழக டி.ஜி.பிக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்ய கோரியும் இதுவரை தமிழக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதால், உடனடியாக வழக்கு பதிய உத்தரவிடக் கோரி அ.தி.மு.க. எம்பி ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தின் மீது முதல் கட்ட விசாரணை நடந்துக் கொண்டிருக்கிறது என்றார். இதற்கு தலைமை நீதிபதி ஏன் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு தரப்பில் மனுதாரர் இன்பதுரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மனுதாக்கல் செய்துள்ளார் என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அரசியல் காழ்ப்புணர்ச்சி பற்றியெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை, வழக்கின் தன்மையை பார்க்கிறோம்.. தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யும்படி எங்களால் இப்போதே உத்தரவிட முடியும். ஆனால் போதிய அவகாசம் வழங்க வேண்டும் என்பதால் வரும் 28-ந் தேதிக்குள் எழுத்து பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய அரசுக்கு அவகாசம் அளிப்பதாக கூறினர். மேலும் அமலாக்கத் துறை டி.ஜிபி.க்கு அனுப்பிய ஆதாரங்களை 28ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் விசாரணையை வரும் 28-நதேதிக்கு ஒத்திவைத்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
திருப்பதியில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்... 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3¾ கோடி
ஆபாச வீடியோ, புகைப்படம்... மடாதிபதியிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய இளம்பெண் கைது
திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரெயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
திருப்பதியில் ஒரு நாள் உண்டியல் காணிக்கை ரூ.4½ கோடி
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
