ஏஐ-க்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம்: அமேசான் நிறுவன அதிகாரி

  தினத்தந்தி
ஏஐக்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம்: அமேசான் நிறுவன அதிகாரி

தகவல் தொழில்நுட்ப உலகின் புதிய புரட்சியாக செயற்கை நுண்ணறிவு தளங்கள் மாறிவிட்டன. சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ என பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் உள்ளன. ஏஐ வருகையால் பல்வேறு துறைகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து இருப்பதால், பல ஆயிரம் ஊழியர்களை நீக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ஐடி துறை மட்டும் இன்றி பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தும் எனத்தெரிகிறது. இந்த நிலையில், ஏஐ தொழில் நுட்பத்திற்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள் தனமானது என்று அமேசான் வெப் சர்வீஸ் சிஇஓ மேட் கார்மன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்த விரும்பும் முதலாளிகளின் முடிவு முட்டாள்தனமானது. ஏனெனில், இன்று இந்த முடிவு புத்திசாலித்தனமானதாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் அனுபவம் வாய்ந்த நபர்கள் யாரும் உங்கள் நிறுவனங்களில் இருக்க மாட்டார்கள்” என்று எச்சரித்துள்ளார்.

மூலக்கதை