தென் கொரியா இரட்டை வேடம் போடுகிறது ; வடகொரியா விமர்சனம்

  தினத்தந்தி
தென் கொரியா இரட்டை வேடம் போடுகிறது ; வடகொரியா விமர்சனம்

பியாங்காங், வடகொரியா அதிபராக யூன்சுக் இயோல் இருந்தபோது அவசரநிலை பிரகடனப்படுத்தி உடனடியாக வாபஸ் பெற்றார். இதனால் அவர் மீது விமர்சனம் எழுந்தநிலையில் பதவி விலக்கப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். தென்கொரியாவின் புதிய அதிபராக லீ ஜே மூங் என்பவர் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் வடகொரியா உடனான பகையை நிறுத்துவதற்காக பேச்சுவார்த்தை தொடங்குவேன் என அறிவித்தார். தற்போது அமெரிக்கா உடனான கூட்டுப்போர் பயிற்சியில் தென்கொரியா தீவிரமாக ஈடுபடுகிறது. இந்த பயிற்சி போர் பதற்றத்தை தூண்டும் வகையில் உள்ளதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்தார். இந்தநிலையில் கிம் ஜாங் அன்னின் சகோதரியும் நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவருமான கிம் யோ யங் தென்கொரியாவின் இந்த நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார். தென்கொரியாவின் இந்த நிலைப்பாடு இரட்டை வேடம் போல உள்ளது. பரம எதிரியான தென்கொரியாவை பழி தீர்க்காமல் விடமாட்டோம் என கொக்கரித்து உள்ளார்.

மூலக்கதை