பச்சை துரோகி அல்பானீஸ் - இஸ்ரேல் பிரதமர் காட்டம்

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்தது. மேலும் போரை உடனடியாக முடிவு கொண்டு வர உலக தலைவர்கள் பலரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதற்கு பலனில்லாமல் போர் தொடர்ந்து வருகிறது. இதனால் கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க உள்ளதாக தெரிவித்தன. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நேற்று பத்திரிகையாளர்களிடம் காட்டமான விமர்சனத்தை முன்வைத்தார். குறிப்பாக ஆஸ்திரேலியா பிரதமர் மீது வன்மத்தை கக்கினார். அவர், “ பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரதமர் அல்பானீஸ் அறிவித்தது பச்சை துரோகம். அவருக்கு அரசியல் தெரியவில்லை.” என பொங்கினார். இதற்கு அல்பானீஸ், “இஸ்ரேல் பிரதமரின் வசைப்பாட்டை நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்” என பதிலடி கொடுத்துள்ளார்.
மூலக்கதை
