தவெக கொடி கம்பம் விபத்து - நீதிபதியிடம் முறையீடு

  தினத்தந்தி
தவெக கொடி கம்பம் விபத்து  நீதிபதியிடம் முறையீடு

மதுரை,மதுரையில் அனுமதி பெறாமல் உள்ள பேனர்கள், கொடி கம்பங்களை அகற்றி ஒரு மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவின் மீதான விசாரணை மதுரை ஐகோர்ட்டு கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தவெக மாநாட்டில் 100 அடி உயர கொடிக்கம்பம் விழுந்துள்ளது. இதில் ஒரு கார் சேதம் அடைந்துள்ளது என்ற தகவலை நீதிபதியிடம் வழக்கறிஞர்கள் முறையீடாக கூறினார். நீதிபதிகள் எஸ்.என்.சுப்ரமணியன், அருள் முருகன் அமர்வில் இந்த முறையீடு செய்யப்பட்டது. இதற்கு நீதிபதிகள் கூறும் போது, மதுரை ரிங் ரோடு பகுதியில்அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகள், பேனர்கள் இருப்பதை பார்த்தோம். காற்று பலமாக வீசும்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் என்ன செய்வது. உரிய அனுமதி இல்லாமல் வைக்கக்கூடிய பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையை முறையாக பின்பற்ற வேண்டும். ஒரு மணி நேரத்தில் பிளெக்ஸ் பேனர்கள் அகற்ற வேண்டும் ” என்று உத்தரவிட்டனர்.

மூலக்கதை