த.வெ.க. மாநாட்டு திடலுக்கு வருகை தந்த விஜய்

  தினத்தந்தி
த.வெ.க. மாநாட்டு திடலுக்கு வருகை தந்த விஜய்

மதுரை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் த.வெ.க. 2ம் மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெறுகிறது. மதுரையின் பாரபத்தியில் 506 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 1.5 லட்சம் பேர் அமர வசதியாக இருக்கைகள், குடிநீர் வசதி, பெண்களுக்கென பிங்க் ரூம் வசதி உள்பட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாளை நடைபெறும் த.வெ.க. மாநில மாநாட்டில் பங்கேற்க த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை மதுரைக்கு சென்றடைந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் மதுரை சென்றடைந்த விஜய், விரகனூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று இரவு தங்குகிறார். அதன்பின், நாளை மாநாடு நடைபெறும் பாரபத்திக்கு செல்கிறார். நாளை நடைபெறும் கட்சியின் மாநில மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், த.வெ.க. மாநாட்டு திடலுக்கு அதன் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். அவர், மாநாட்டை முன்னிட்டு என்னென்ன ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு உள்ளன மற்றும் மாநாட்டுக்காக நடந்து வரும் பணிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு வருகிறார்.

மூலக்கதை