சென்னையில் இன்று 9 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

  தினத்தந்தி
சென்னையில் இன்று 9 வார்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சென்னை, சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (21.08.2025) 9 வார்டுகளில் நடைபெற உள்ளது. இதன்படி திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-10க்குட்பட்ட பூந்தோட்டம் தெருவில் உள்ள பூந்தோட்டம் விளையாட்டு மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-48க்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, மின்ட் சுப்பராயன் தெரு, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-58க்குட்பட்ட சிடன்ஹாம்ஸ் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி சமுதாயநலக் கூடம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-80க்குட்பட்ட சூரப்பேட்டை பிரதான சாலையில் உள்ள பி.டி.ஆர். திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-117க்குட்பட்ட மெலனி சாலையில் உள்ள மனோரமா ஆச்சி பள்ளி, கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-141க்குட்பட்ட சி.ஐ.டி. நகர், 3வது குறுக்குத்தெருவில் உள்ள விளையாட்டுத் திடல், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-165க்குட்பட்ட வானுவம்பேட்டை, பழண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ பழண்டியம்மன் திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-175க்குட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், 5வது அவென்யூவில் உள்ள அம்மா மண்டபம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-190க்குட்பட்ட பள்ளிக்கரணை, வேளச்சேரி சாலையில் உள்ள ஐஸ்வர்யா திருமண மண்டபம் ஆகிய 9 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை