அமைச்சர் அன்பில் மகேஷ் கார் செல்லும் வரை ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்

சென்னை,பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கார் கடந்து செல்லும் வரை ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதையடுத்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது தவறான தகவல். இந்த வீடியோ 2022-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணைக்கரை பாலம் வழியாக சென்றார். அணைக்கரை பாலம் ஒரு வழியாக இருப்பதால் பாலத்தின் ஒருபக்கம் வாகனங்கள் சென்ற பிறகே அடுத்த கரையில் நிற்கும் வாகனங்கள் செல்ல முடியும். இப்படி எதிர்திசையில் ஆம்புலன்ஸ் காத்திருந்த வீடியோவை திரித்து தவறாக பரப்பி வருகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.
மூலக்கதை
