தமிழகத்தில் 70 லட்சம் வெளிமாநில வாக்காளர்கள்? - வெளியான தகவல்

  தினத்தந்தி
தமிழகத்தில் 70 லட்சம் வெளிமாநில வாக்காளர்கள்?  வெளியான தகவல்

சென்னை,பீகாரில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி பீகாரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள 35 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும், அரசியலமைப்பு சட்டத்தின்படி தாங்கள் எந்த மாநிலத்தில் வசிக்கிறார்களோ, அங்குள்ள வாக்காளர் பட்டியலில் சேர்ந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டு உள்ளது. அதனால் தமிழகத்தில் உள்ள பீகாரிகள் சுமார் 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் இணைவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் தீவிர வாக்காளர் திருத்தப்பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டால் இடமாற்றம் செய்துள்ள தொழிலாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். அதன்படி கணக்குபார்த்தால் தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்கள் சுமார் 70 லட்சம் பேர் தமிழக வாக்காளர்களாக சேரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெரும்பாலான கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றன. எனவே தான் தமிழக அரசு, அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்துவிட, வேகமாக பணிகளை தொடங்கி உள்ளனர். இது ஒரு அரசியல் சூழ்நிலை ஆய்வுக்கான ஒரு முன்னெடுப்பு என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மூலக்கதை