ஆப்கானிஸ்தான்: சாலை விபத்தில் தீப்பிடித்து எரிந்த பஸ் - 71 பேர் பலி

காபூல் ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணத்தில் பஸ் ஒன்று புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது. குசாரா மாவட்டத்தில் உள்ள ஹெராத் நகர் அருகே பஸ் சென்றுகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒரு லாரி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக பஸ் திடீரென தீப்பற்றி மளமளவென எரியத்தொடங்கியது. இதில் எதிர்பாராதவிதமாக பஸ்சில் பயணம் செய்த 17 குழந்தைகள் உள்பட 71 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பஸ் சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்தது. ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்ற பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 71 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலக்கதை
