சுதந்திர தினம்: நெல்லை - கர்நாடகா இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- சுதந்திர தினத்தன்று பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்: நெல்லை - ஷிமோகா டவுன் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (ரெயில் எண். 06103) ஆகஸ்ட் 17, 2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை 4.20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.00 மணிக்கு கர்நாடகாவின் ஷிமோகா டவுனை சென்றடையும். மறுமார்க்கத்தில் ஷிமோகா டவுன் - நெல்லை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (ரெயில் எண். 06104) ஆகஸ்ட் 18, 2025 (திங்கள்) அன்று பிற்பகல் 2.20 மணிக்கு ஷிமோகா டவுனில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் வழி: நெல்லை, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர் சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூர், அர்சிகெரே, பிரூர், தரிகெரே, பத்ராவதி, ஷிமோகா நகரம்பெட்டி அமைப்பு: 1- ஏசி இரண்டு அடுக்கு பெட்டி, 2- ஏசி மூன்று அடுக்கு பெட்டிகள், 9- ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகள், 4- பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 2- லக்கேஜ் கம் பிரேக் வேன்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
