திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம் - பரணி காவடி எடுத்து வழிபாடு

  தினத்தந்தி
திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்  பரணி காவடி எடுத்து வழிபாடு

திருவள்ளூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவின் 2-ம் நாளான இன்று, ஆடி பரணியை முன்னிட்டு அதிகாலையில் மூலவருக்கு மரகத மாலை, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், திருத்தணி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பரணி காவடி எடுத்து வந்து உற்சாகமாக பக்தி கோஷங்களை எழுப்பி, ஆடிப்பாடி, முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை