ஐதராபாத்தில் இருந்து சேலம், திருப்பூர் வழியாக கொல்லம் செல்லும் ரெயில் சேவை நீட்டிப்பு

  தினத்தந்தி
ஐதராபாத்தில் இருந்து சேலம், திருப்பூர் வழியாக கொல்லம் செல்லும் ரெயில் சேவை நீட்டிப்பு

திருப்பூர், ஐதராபாத்திலிருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு சனிக்கிழமை தோறும் இரவு 11.10 மணிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண். 07193) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்சேவையானது வருகிற அக்டோபர் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொல்லத்திலிருந்து திங்கட்கிழமைதோறும் காலை 10.45 மணிக்கு இயக்கப்படும் ரெயிலும் அக்டோபர் 13-ந்்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில்களானது செகந்திரபார், கூடூர், ரேணிகுண்டா, திருப்பதி, காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை