குமரி: ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

குமரி, குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ். இவருடைய மனைவி பசிவா (வயது 49). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ரவிபுதூர்கடையில் இருந்து பள்ளியாடிக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். பின்னர் அவர், பள்ளியாடி நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு பசிவா அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமி நகை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து பசிவா தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மூலக்கதை
