சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

  தினத்தந்தி
சேலம் வழியாக செல்லும் ரெயில் சேவைகளில் மாற்றம்

சேலம், கோவை வடக்கு ரெயில்வே யார்டில் தண்டவாள புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி சேலம் வழியாக இயக்கப்படும் சில ரெயில்களின் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (வண்டி எண்-66612) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூர் மெமு ரெயில் (வண்டி எண்-66615) நாளை மறுநாள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரெயில் சேவையில் மாற்றம் சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம் - மங்களூர் சென்டிரல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-161591) நாளை மறுநாள் இருகூர் - போத்தனூர் வழியாக திருப்பி விடப்படும். இதனால் அன்றைய தினம் பீளமேடு, கோவை வடக்கு மற்றும் கோவை சந்திப்பு ரெயில் நிலையங்களில் இந்த ரெயில் நிற்காது. இதேபோல், இன்று இயக்கப்படும் பாட்னா - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-22644) இருகூர் - போத்தனூர் வழியாக திருப்பி விடப்படும். இதனால் இந்த ரெயில் நாளை மறுநாள் கோவை ரெயில் நிலையத்திற்கு வராது. அதற்கு பதிலாக போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு வந்து புறப்படும். திப்ருகர் - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் நாளை மறுநாள் இருகூர் - போத்தனூர் வழியாக திருப்பி விடப்படும். இதன் விளைவாக ரெயில் கோவை ரெயில் நிலையத்திற்கு வராது. எனவே, போத்தனூர் ரெயில் நிலையத்திற்கு காலை 10.42 மணிக்கு வந்து 10.45 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ஆலப்புழாவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) நாளை மறுநாள் கோவை ரெயில் நிலையத்திற்கு செல்லாமல் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும். அதேபோல், எர்ணாகுளம் - கே.எஸ்.ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12678) நாளை மறுநாள் கோவை ரெயில் நிலையத்திற்கு செல்லாமல் போத்தனூர் - இருகூர் வழியாக இயக்கப்படும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை