நாகாலாந்து மாநில கவர்னர் இல.கணேசன் மறைவு - தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

சென்னை, பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; நாகாலாந்து கவர்னர் இல கணேசன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது தேசப்பற்றாளரான அவர் சுதந்திர தின அன்று மறைந்திருப்பது ஆச்சரியத்திற்குரியது தேசப்பற்று தெய்வப்பற்று தமிழ் பற்று மிகுந்தவர் அரசியலில் மட்டுமல்ல இலக்கிய உலகிலும் பரிமளித்தவர் பாஜகவின் இன்றைய வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் ஆர்.எஸ்.எஸி ல் தொண்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து இன்று கவர்னராக தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்தவர். இன்று பாரதிய ஜனதா கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அத்தனை தலைவர்களையும் உருவாக்கியவர் பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல இலக்கியவாதிகளுக்கு பக்க பலமாக இருந்தவர் அதில் அரசியலில் அவருக்கு நிர்வாகியாக பணியாற்றியது மட்டுமல்லாமல் பொற்றாமரை என்ற இலக்கிய அமைப்பிலும் அவரோடு நிர்வாகியாக பணியாற்றும் பாக்கியம் பெற்றவள் கட்சியில் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் வழி வகுத்தவர் அவர் இழப்பு மிகப்பெரிய இழப்பு அவரை இழந்து வாடும் அவர் உறவினர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலக்கதை
