இல. கணேசன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி

  தினத்தந்தி
இல. கணேசன் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு: கவர்னர் ஆர்.என்.ரவி

சென்னை, கீழே விழுந்ததால் தலையில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இல.கணேசன் மறைவிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் அவர்களின் மறைவால் மிகுந்த வேதனையடைந்தேன். இளம் வயதிலிருந்தே, எளிமையுடனும் பணிவுடனும், தன்னலமற்ற சேவைகளுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது மறைவு தேசத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் நாகாலாந்து மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" . என தெரிவித்துள்ளார் .

மூலக்கதை