தவெக மாநாடு: ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமனம்

  தினத்தந்தி
தவெக மாநாடு: ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமனம்

சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21-ந்தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்டமாக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 200 அடி நீளமும், 60 அடி அகலம் கொண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் நடந்து சென்று தொண்டர்களை பார்ப்பதற்காக 800 அடி தூரத்திற்கு நடைமேடையும் அமைக்கப்படுகிறது. மாநாடு மாலை 3.15 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் , தவெக மாநாடு பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,நம் கழகத் தலைவர் அவர்கள் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 'வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு' மாநில மாநாடு. வருகிற 21.08.202E அன்று மதுரை மாவட்டம், பாரப்பத்தியில் நடைபெற இருப்பதை அனைவரும் அறிவீர்கள். இந்த மாநாட்டுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், வெற்றித் தலைவர் அவர்களின் உத்தரவின் பேரில் மாநாட்டுப் பணிகளுக்கெனட் பல்வேறு ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.என தெரிவிக்கப்பட்டுள்ளது . pic.twitter.com/lKOOZHXU5F

மூலக்கதை