திருநெல்வேலி: கடையில் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

நெல்லை மாநகர், மேலப்பாளையம் அம்பை ரோடு வசந்தாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அப்துல்ரகுமார் (வயது 45). இவர் அந்த பகுதியில் பைகள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவில் வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு சென்றார். நேற்று முன்தினம் காலையில் மீண்டும் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்குள்ள இரும்பு பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூலக்கதை
