டிரம்ப்-புதின் சந்திப்பு நெருங்கி வரும் சூழலில்... தாக்குதலில் உக்ரைன் தீவிரம்; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு

  தினத்தந்தி
டிரம்ப்புதின் சந்திப்பு நெருங்கி வரும் சூழலில்... தாக்குதலில் உக்ரைன் தீவிரம்; ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு

கீவ், உக்ரைனுக்கு எதிராக ரஷியா தொடுத்து வரும் போரானது 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் வீரர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர், இரு நாடுகளிடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் புதின் சற்று இறங்கி வந்துள்ளார். இதன்படி, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் வருகிற 15-ந்தேதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் நேரில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பில் உக்ரைன் அமைதி ஒப்பந்தம் பற்றி இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை டிரம்ப், அவருடைய ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தினார். 4 ஆண்டுகளில் முதன்முறையாக இரு தலைவர்களும் நேருக்கு நேராக சந்தித்து ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளனர். இந்நிலையில், ரஷிய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ரஷிய-அமெரிக்க தலைவர்களின் சந்திப்பு நெருங்கி வரும் சூழலில், ரஷிய பகுதிகளில் தன்னுடைய பயங்கரவாத நடவடிக்கைகளை உக்ரைன் அரசு தீவிரப்படுத்தி உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. கடந்த வாரத்தில் உக்ரைன் நடத்திய எறிகுண்டு மற்றும் டிரோன் தாக்குதல்களில் 22 பேர் பலியானார்கள். 105 பேர் காயமடைந்து உள்ளனர். மொத்தம் 127 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அதில் தெரிவித்து உள்ளது. உக்ரைன் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ரஷியாவின் எல்லை பகுதிகளை அடையாளப்படுத்தும் வரைபடம் ஒன்றையும் அமைச்சகம் பகிர்ந்துள்ளது. உக்ரைன் ஒருபோதும் அமைதியை கோரவில்லை என்றும் பகைமையை நீட்டிப்பது மற்றும் அதிகாரத்தில் ஒட்டி கொள்வதற்கான ஒரு வழியாகவே பேச்சுவார்த்தையை பார்க்கிறது என்றும் தெரிவித்து உள்ளது. அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் எல்மென்டார்ப்-ரிச்சர்ட்சன் கூட்டு படை தளத்தில் ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறவுள்ள போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், 3 ஆண்டுகளை கடந்து நடந்து வரும் மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.#KievRegimeCrimes #Fadeev: With the #RussiaUS Summit approaching, the Kiev regime has stepped up its terrorist activity against Russian regions.❗️ Over the last week, 127 Russian citizens suffered from shelling and drone attacks. 22 died, 105 were wounded. pic.twitter.com/k25xDK8pHq

மூலக்கதை