ரைட்ஸ் நிறுவனத்தில் எலக்ட்ரிக்கல் பொறியாளர் பணி

தினமணி  தினமணி

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineer (Electrical)

காலியிடங்கள்: 13

சம்பளம்: மாதம் ரூ.14,940

வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 31க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ராணிக்ஸ் பிரிவில் பிரிவில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 14.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.rites.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மூலக்கதை