ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம்?

தினமணி  தினமணி
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம்?

முன்னாள் தலைமைச் செயலாளரும், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனத்தின் ("டிட்கோ') தலைவர் -நிர்வாக இயக்குநருமான கே.ஞானதேசிகன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சுரங்கம்-கனிம வளத் துறை ஆணையாளருமான அதுல் ஆனந்த் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனிம வளங்கள் குறித்த விவகாரம் தொடர்பாக இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அதுல் ஆனந்த், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை திங்கள்கிழமை (ஆக.29) மாலை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தியதாகவும் விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், மின்வாரியத் தலைவர், நிதித் துறை செயலாளர் உள்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.

அதுல் ஆனந்த் கடந்த பல ஆண்டுகளாகவே எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பையும், சுரங்கம்-கனிம வளத் துறை ஆணையாளர் பொறுப்பை கூடுதலாகவும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி பணியிடை நீக்கம், தலைமைச் செயலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மூலக்கதை