தேர்தல் கமிஷன் சின்னத்தை முடக்கியது: இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை முடக்குவார்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்தல் கமிஷன் சின்னத்தை முடக்கியது: இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவை முடக்குவார்கள்  ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு

ஈரோடு- முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியதாவது: காமராஜர் தமிழகத்தின் முதல்வராக 9 ஆண்டுகள் இருந்தார் என்றால், விடுதலை பெறுவதற்கு முன் வெள்ளையர்களை எதிர்த்து 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.

ஆனால் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பங்காளியை கொன்றதற்காக ஜெயிலுக்கு சென்று வந்தவர். இன்றைக்கு தமிழகத்தில் கோமாளித்தனமான அரசியல் நடக்கிறது.

அசோகர் போர்களத்தில் மனித பிணங்களை பார்த்த பிறகு ஞானோதயம் பெற்றார்.

ஆனால் இன்று பல அரசியல் தலைவர்கள் சுடுகாட்டிற்கு சென்று தியானம் செய்த பிறகே ஞானோதயம் பெறுகிறார்கள். நாட்டை கொள்ளையடித்தவர்களும், ஊழல் செய்பவர்களும் தான் ஆட்சி செய்ய முடியும் என்ற நிலையை மாற்ற வேண்டும் என்றால் சசிகலாவின் பினாமி ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

தற்போது தேர்தல் கமிஷன் அதிமுகவின் சின்னத்தை முடக்கி விட்டது. இடைத்தேர்தலின் முடிவில் தமிழக மக்கள் அதிமுகவையே நிரந்தரமாக முடக்கி விட்டனர் என்ற செய்தி கட்டாயம் வரும்.

இவ்வாறு இளங்கோவன் பேசினார்.

.

மூலக்கதை