டெல்டாவில் கடும் பனிப்பொழிவு - ரயில், விமான சேவை பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்டாவில் கடும் பனிப்பொழிவு  ரயில், விமான சேவை பாதிப்பு

திருச்சி- திருச்சி, தஞ்சாவூர், புதுகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று அதிகாலை துவங்கி கடும் பனிப்பொழிவு சாரல் மழையாக பொழிந்தது. சாலைகள் பனிப்போர்வையால் மூடப்பட்டிருந்தன.

காலை 8 மணி வரை கும்மிருட்டாகவே காட்சியளித்தது. வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி ஓட்டி சென்றனர்.

முகப்பு விளக்கு எரியவிட்டப்படி வந்தாலும் எதிர்திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிடமுடியாமல் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமடைந்தனர். கடும் பனிப்பொழிவு நேரம் செல்ல செல்ல சாரல் மழையாக மாறியது.
கடும் பனிபொழிவு காரணமாக விழுப்புரம் - அரியலூர் இடையே பனி மூட்டம் தண்டவாளத்தை ஆக்ரமித்து கொண்டதால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.



இதனால் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு வந்த ரயில்களும், சென்னை சென்ற ரயில்களும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. இதனால் சென்னையில் இருந்து திருச்சி வந்த மலைக்கோட்டை, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், மலைக்கோட்டை முற்றிலும் பனிமூட்டத்தால் மறைக்கப்பட்டன. இதேபோல விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளத்தில் இறங்க முற்பட்டன.

ஆனால் அங்கு போதிய வெளிச்சமின்மை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக 3 விமானங்களும் திருச்சி விமானநிலையத்தில் இறங்க அறிவுறுத்தப்பட்டு இறக்கப்பட்டது.

.

மூலக்கதை