தேர்வில் முறைகேட்டை தடுக்க மாணவர்களின் ஆதார் எண் இணைப்பு: பிகார் அரசு முடிவு

தினமணி  தினமணி

தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பது, தேர்வு தொடர்பான ஆவணங்களை எளிதில் பெறுவது உள்ளிட்ட நோக்கத்துக்காக, மாணவர்களின் தேர்வு படிவங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க பிகார் அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம், நாட்டிலேயே மாணவர்களின் தேர்வு நடைமுறைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் மாநிலம் என்ற பெருமையை பிகார் பெறுகிறது.

இதுகுறித்து பிகார் மாநில பள்ளிக்கல்வி தேர்வு வாரியத் (பிஎஸ்இபி) தலைவர் ஆனந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தேர்வு படிவங்களை (ஃபார்ம்) மாணவர்கள் சமர்ப்பிப்பதற்கு முன்னதாக, தங்களிடம் ஆதார் எண் உள்ளதா? இல்லையா? என்பதை குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இருக்கும்பட்சத்தில், அதை மாணவர்கள் குறிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாதபட்சத்தில், அதற்காக மாணவர்கள் விண்ணப்பித்துப் பெறலாம். அப்படி செய்தால், ஆதார் எண்ணை குறிப்பிடும் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன், இவர்களுக்கும் கிடைக்கும். இந்த நடைமுறை, வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மறுதேர்வில் இருந்து அமல்படுத்தப்படுகிறது என்றார் ஆனந்த் கிஷோர்.

மூலக்கதை