அதிகரித்து வரும் இயற்கை ரப்பர் பயன்பாடு

தினமணி  தினமணி
அதிகரித்து வரும் இயற்கை ரப்பர் பயன்பாடு

*நாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜூலை மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்து 52,000 டன்னாக இருந்தது. அதன் பயன்பாடு 4.3 சதவீதம் உயர்ந்து 87,000 டன்னாக காணப்பட்டது.

*ரப்பர் இறக்குமதி சென்ற ஜூலை மாதத்தில் 41,917 டன்னிலிருந்து சரிவடைந்து 41,157 டன்னாகவும்; ஏற்றுமதி 39 டன்னிலிருந்து குறைந்து 34 டன்னாகவும் இருந்தது.

*நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல்-ஜூலை வரையிலான கால அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி 4.5 சதவீதம் உயர்ந்து 1.87 லட்சம் டன்னாக இருந்தது. ரப்பர் பயன்பாடு 3,26,935 டன்னிலிருந்து 5.4 சதவீதம் அதிகரித்து 3,44,525 டன்னாக காணப்பட்டது.

*ஏப்ரல்-ஜூலை வரையிலான கால அளவில், இயற்கை ரப்பர் இறக்குமதி 1,54,761 டன்னிலிருந்து குறைந்து 1,48,488 டன்னாகவும்; ஏற்றுமதி 53 டன்னிலிருந்து அதிகரித்து 267 டன்னாகவும் இருந்தது.

*ஜூலை இறுதி நிலவரப்படி இயற்கை ரப்பர் கையிருப்பு 2.11 லட்சம் டன்னாக உள்ளது என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை