பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரி விகிதம் இருக்க வேண்டும்: ஜோதிராதித்ய சிந்தியா
பணவீக்க காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) விகிதம் இருத்தல் அவசியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
பணவீக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை கட்டுப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டி வரி விகிதம் இருத்தல் அவசியமாகும். அப்படி இல்லாமல், ஜிஎஸ்டி வரி விதிகம் உயர்வாக இருந்தால், பாமர மக்களின் சுமையை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்படுவர். இதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.
பிற வளர்ந்து வரும் நாடுகளில் இதுபோன்ற வரி விதிப்பின் விகிதம், 16 சதவீதம் மற்றும் 16.5 சதவீதமாக உள்ளது. இதை விட அதிகமாக வரி நமது நாட்டில் விதித்தால், தீவிர விளைவுகளை ஏற்படுத்தும் என்றார் ஜோதிராதித்ய சிந்தியா.
நாடு முழுவதும் தற்போது அமலில் இருக்கும் பல்வேறு மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு, ஜிஎஸ்டி வரியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அரசமைப்புச் சட்ட மசோதா கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, அரசமைப்புச் சட்ட மசோதா என்பதால், நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதி மாநிலங்களின் ஒப்புதல் அவசியமாகும். இதையடுத்து, மாநிலங்களின் ஒப்புதலுக்கு விடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 17 மாநில சட்டப் பேரவைகள் தங்களது ஒப்புதலை ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதாவுக்கு அளித்தன. எனவே, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதல் கிடைத்ததும், ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக விவாதிக்க குழுவை மத்திய அரசு அமைக்கும். அந்த குழு கூடி, வரி விதிப்பு விகிதம் உள்ளிட்டவைகளை முடிவு செய்யும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
