மதுவிலக்கு: பிகார் முதல்வருக்கு தொகாடியா பாராட்டு
பிகாரில் பூரண மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர் நிதீஷ் குமாருக்கு விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியா பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பிகாரில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வந்ததற்காக, அந்த மாநில முதல்வர் நிதீஷ் குமாரை மனதார பாராட்டுகிறேன். இதுவரை மதுவுக்காக பொதுமக்கள் செலவிட்டு வந்த கோடிக்கணக்கான ரூபாய் இனி நல்ல காரியங்களுக்குப் பயன்படும்.
இதன்மூலம், அவர்களது துயரங்கள் மறையும்.
பிகாரைப் பின்பற்றி, இந்தியாவின் பிற மாநிலங்களும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
போதை அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான தொலைபேசி உதவி மையத்தை விஹெச்பி உருவாக்கியுள்ளது.
எங்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் மூலம் அளிக்கப்பட்டு வரும் இந்தச் சேவைக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
