பஞ்சாப்: குண்டு வெடிப்பில் 2 பேர் பலி; 4 பேர் காயம்
பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒரு பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
தேவையற்றவை என்று சாலையோரங்களில் தூக்கி எறியப்படும் பொருள்களை சேகரித்து விற்கும் தொழிலில் சாஸ்திரி நகரைச் சேர்ந்த 2 பேர் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் இருவரும் சாஸ்திரி நகரில் வழக்கம்போல், தேவையற்ற பொருள்களை சேகரிக்கும் பணியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பொருளில் ஒட்டியிருந்த செம்பு உலோகத்தைப் பிரித்தெடுக்க அவர்கள் இருவரும் முயன்றபோது, அது வெடித்தது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். அப்போது, சாலையில் சென்றுகொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
