விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை: பார்வர்ட் பிளாக்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தைவானில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய செயலர் வி.பி. சைனி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: தைவானில் கடந்த 1945-இல் நேரிட்ட விமான விபத்தில் நேதாஜி உயிரிழந்ததாக லண்டனைச் சேர்ந்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தவறான செய்தியாகும். லண்டன் இணையதளத்தின் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஆவணங்கள், 24 ஆண்டுகளுக்கு முந்தையவை. நேதாஜி மரணம் தொடர்பாக ஜப்பான்தான் ஆவணங்களை அளித்தது. ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்தும் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.
தைவான், இந்தியாவுக்கு எழுத்துப்பூர்வமாக அனுப்பிய அறிக்கையில், தங்கள் நாட்டில் நேதாஜி உயிரிழந்ததாக கூறப்படும் விமான விபத்து எதுவும் நேரிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நேதாஜி விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று சைனி குறிப்பிட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
