ஜார்க்கண்ட்: தீவிரவாதிகளால் 3 இளைஞர்கள் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம், கூன்ட்டி மாவட்டத்தில் இளைஞர்கள் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கூன்ட்டி மாவட்டம், காஸிரா என்ற கிராமத்துக்கு அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதியில் 4 இளைஞர்களை இந்திய மக்கள் விடுதலை முன்னணி (பிஎல்எஃப்ஐ) இயக்கத் தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவு சுட்டுக் கொன்றதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த வனப் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். அப்போது, 3 இளைஞர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்த 3 இளைஞர்களும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்கள். அந்தப் பகுதியில் யார் பலம் மிக்கவர் என்ற போட்டி ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
