பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 302 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. முன்னதாக நடைபெற்ற 4 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோற்றது. இந்நிலையில் கடைசி போட்டி கார்டிஃப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய் அபாரமாக ஆடி 87 ரன்கள் (89 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசினார். மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், 5-ஆவதாக களம்கண்ட பென் ஸ்டோக்ஸ் அதற்கு அணைபோட்டார்.
அவர் 76 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 75 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர்கள் தவிர, பேர்ஸ்டோ (33 ரன்கள்) மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் ரன்சேர்த்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. எதிரணி தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, ஆறுதல் வெற்றியாவது பெறலாம் என்ற முனைப்பில் பாகிஸ்தான் அணி 303 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடியது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
