முருகப்பா கோப்பை ஹாக்கி: ராணுவ லெவன், ஐஓசி அணிகள் வெற்றி
90-ஆவது அகில இந்திய முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடரில் ராணுவ லெவன், ஐஓசி அணிகள் வெற்றி கண்டன.
எம்.சி.சி. மற்றும் முருகப்பா குழுமம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் ராணுவ லெவன் - கர்நாடக அணிகள் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் ராணுவ அணி வெற்றி பெற்றது.
அந்த அணி தரப்பில் ரஜனீஷ் சலரிகா (34-ஆவது நிமிடம்), பினாய் பெங்காரா (54) ஆகியோர் கோல் அடித்தனர். எதிரணி தரப்பில் 28 ஆவது நிமிடத்தில் ஹானுர் சுவாமி மட்டும் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது ஆட்டத்தில் ஐஓசி, ஏர் இந்திய அணியை எதிர்கொண்டது. ஐஓசி அணியில் வி.ஆர்.ரகுநாத் அபாரமாக ஆடி 3, 11, 47, 65-ஆவது நிமிடங்களில் கோல் மழை பொழிந்தார். தீபக் தாக்குர் தனது பங்குக்கு 32-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஆனால், ஏர் இந்தியா தரப்பில் ஜோகா சிங் (26, 49), ககன்தீப் சிங் (44), விக்ரம் பிலி (51) ஆகியோர் கோல் அடித்தனர். இருப்பினும் 5-1 என்ற கணக்கில் ஐஓசி வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் சிந்து வங்கி அணி - ஓஎன்ஜிசி அணிகள் மோதின. இதில் பஞ்சாப் சிந்து அணிக்கு சர்வந்த்ஜித் சிங் (26), ரமன்தீப் சிங் (62), ககன்பிரீத் சிங் (70) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பதிலடியாக ஓஎன்ஜிசி சார்பில் குருவிந்தர் சாண்டி (6), குருஜிந்தர் சிங் (45), திவாகர் ராம் (60) ஆகியோர் கோல் போட்டனர். இதனால், இந்த ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இன்றைய ஆட்டங்கள்
தமிழ்நாடு ஹாக்கி அணி - மும்பை ஹாக்கி சங்கம்
நேரம்: மாலை 4.15 மணி
பிபிசிஎல் - ஏர் இந்தியா
நேரம்: மாலை 6 மணி.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
